Pages

Saturday, September 15, 2018

சந்நிதியானுக்கு மீண்டும் கொடி…..!! யாழில் வேகமாகப் பரவும் வதந்தி….!!

தயவு செய்து அனைவருக்கும் இவ்விடயத்தை பகிருங்கள் 

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் மீண்டும் கொடியேற்றம் எனப் பல வதந்தி பரப்புரைகள் பரப்பபடுகின்றது .இவ் விடயம் தொடர்பானது பொய்யான பரப்புரைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுகின்றது.



எனவே ஆலயத்தில் இவ்வாறான விடயம் தொடர்பாக கேட்ட போது, அவ்வாறான விடயம் ஒரு போதும் சாத்தியம் இல்லை என்பதை விபரித்தார் இம்முறை நடைபெற்ற மகோற்சவத்தின் பிரதம பூசகர் தம்பி ஐயா.

அவரை இன்று ஆலயத்தில் அணுகிய கணப்பொழுது போது அவரினால் எமக்கு கூறப்பட்ட விடயம் அப்படி ஒரு போதும் திரும்ப கொடியேறாது இவ்விடயம் தொடர்பாக வதந்தியினை யாராவது பரப்பி இருக்கலாம் எனக்கூறினார்.

இம்முறை நடைபெற்ற மகோற்சவத்தின் பிரதம பூசகர் தம்பி ஐயா.அவரை இன்று ஆலயத்தில் அணுகிய கணப்பொழுது போது அவரினால் எமக்கு கூறப்பட்ட விடயம் அப்படி ஒரு போதும் திரும்ப கொடியேறாது.

இவ்விடயம் தொடர்பாக வதந்தியினை யாராவது பரப்பி இருக்கலாம் எனக்கூறினார். எனவே சந்நிதியான் மெய்யடியார்களே !


சந்நிதியானுக்கு கொடியேற்றம் நடைபெறுமாக இருந்தால் வழமை போன்று அடுத்த வருடமே நடைபெறும். எனவே இவ்வாறான விடயங்களில் ஏமாறாதீர்கள். இது முருகனின் அடியேன் விடுக்கும் அன்பான வேண்டுகோள்.

Saturday, September 8, 2018

நல்லூர் கந்தனின் தேர் திருவிழா புகைப்படங்கள்
























Friday, September 7, 2018

கடலில் மிதந்த பிள்ளையார்! ஆச்சரியத்தில் மக்கள்!

சிலாபம், கருக்குப்பனை பகுதி கடலில் மிதந்தபடி வந்த பழமையான பிள்ளையார் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.



நேற்றைய தினம் மாலை 6.30 மணியளவில் கடலில் மிதந்து வந்த நிலையில் குறித்த விக்கிரகம் கண்டெடுக்கப்பட்டதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.

மரத்தினால் செதுக்கப்பட்ட இவ்விக்கிரகம் இடது கரம் உடைந்த நிலையில் கடற் பாசிகள் படிந்தவாறு காணப்படுகிறது.

இவ்வாறு மிதந்து வந்த சிலையை கண்டெடுத்தவர் தற்போது தனது வீட்டிலே சிலையை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிலையினைப் பார்ப்பதற்காக ஊர் மக்கள் அவரது வீட்டை நோக்கிப் படையெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் எந்த ஆலயத்தினைச் சேர்ந்த சிலையாக இருக்கும் என்ற ஐயம் எழுந்துள்ளது.

Wednesday, September 5, 2018

நல்லூர் கந்தசுவாமி ஆலய மாம்பழத் திருவிழா (படங்கள்)

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22 ஆம் திருவிழாவான மாம்பழத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகப்பெருமானும் வெளிவீதியுலா வந்து சிறப்பாக மாம்பழத் திருவிழா நடைபெற்றது.

திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முருக பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நல்லூர் மகோற்சவ திருவிழாவின் சப்பர திருவிழா நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கும் தேர்த்திருவிழா நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 7 மணிக்கும் மறுநாள் தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது.















புங்குடுதீவு கண்ணகை அம்பாள் தேவஸ்தானம் பாலஸ்தான கும்பாபிஷேகம் பெருவிழா

அம்பிகை அடியார்களே!

எம் பெருமாட்டி புங்குடுதீவு கண்ணகை என வழங்கும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு குட முழுக்கு நடைபெற்று 12 வருடங்கள் பூர்த்தியாகிவிடட்து என்பது என்பது தங்கள் அறிந்ததே. மீளவும் அம்பாளுக்கு குட முழுக்கு நடாத்துவதற்கான காலத்தை அம்பாள் ஆலய அம்பிகை அடியார்களுக்கு அருள் பாலித்துள்ளார். எனவே அதன் முதற்படியாக அம்பாளுக்கு பாலஸ்தான கும்பாபிஷேக நிகழ்வு நடைபெறுகிறது.

அம்பாள் ஆலய புனர்நிர்மான பணிகளுக்கான பாலஸ்தாபன கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் (12.09.2018) ஆவணி மாதம் 27ம் நாள் புதன்கிழமை காலை சித்திரை நட்சத்திரம் திருதியை திதியுடன் கூடிய சுபமுகூர்த்த வேளையில் நடை பெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது.

அம்பாள் ஆலயமானது புதிய பொலிவுடனும் புது மெருகுடனும் பெரும் நிதியுடன் கூடிய செலவுடன் செய்வதற்கான ஆயத்தங்கள் யாவும் நடைபெற்று வருகின்றன. எனவே அம்பிகை அடியார்கள் யாவரையும் இப்பெருத் திருப்பணிகளில் பங்கு கொண்டு தங்களது நிதி உதவிகளை வழங்கி உதவுவதுடன் புனர்நிர்மான திருப்பணிகளை விரைவில் நிறைவேற்றி முடிப்பதற்கு தங்கள் ஆசியையும் பங்களிப்பையும் அம்பாள் வேண்டி நிற்கின்றாள்.

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீமகாவிஷ்ணு ஆலயத்தின் கிருஷ்ண ஜெயந்தி! (படங்கள் , வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயத்தில்  கடந்த  02.09.2018 ஞாயிற்று கிழமை கிருஷ்ண ஜெயந்தி மற்றும் உறியடி உற்சவம் என்பன மிக சிறப்பாக இடம்பெற்றன.

அத்துடன் அருளக மற்றும் நிருத்தியநிகேதன கல்லூரி மாணவர்களதும் கண்ணன் அறநெறி பாடசாலை மாணவர்களதும் நடன நிகழவுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.